
கடந்த 2005, ஆகஸ்ட் 13ல் பிறந்த அகஸ்தியா ஜெய்ஸ்வாலுக்கு, சிறு வயதில் இருந்தே, ஏன்... எதற்கு... எப்படி என, மனதில் உதிக்கும் கேள்விகளுக்கு விடை காண்பதில் அதிக ஆர்வம் உண்டு. அவனது அடங்காத கேள்விப் பசிக்கு, தந்தை அஸ்வினி குமாரும், தாயார் பாக்யலஷ்மியும் சளைக்காமல் பதில் அளித்து வந்தனர்.
அத்துடன், அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவனது இளம் வயது பேராசையை ஊக்குவித்தனர். அதன் விளைவாகவும், பிறவி ஞானத்தாலும், வயதுக்கு மீறிய அறிவாற்றலைப் பெற்ற ஜெய்ஸ்வால், தெலுங்கானா அரசின் சிறப்பு அனுமதியுடன் பள்ளி இறுதித் தேர்வு எழுதினான். கணக்கு மற்றும் மொழியியலில் இவன் புலி.
ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, டாண்... டாண்... என பதில் அளிப்பான் என்கிறார் தந்தை அஸ்வினிகுமார் பெருமிதத்துடன். இவருடைய அக்கா, நைனா ஜெய்ஸ்வாலும் படிப்பில் சுட்டி. இவர், 13வது வயதில், மாஸ் கம்யூனிகேஷன் கல்வியில் பட்டம் பெற்று, இந்தியாவில் மிகக் குறைந்த வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment