Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 19, 2014

    கை விரித்தார் கருணாநிதி... கை கொடுப்பாரா ஜெயலலிதா? 45 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?

    அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்துவது வாடிக்கை. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதிலும், புதிய பள்ளிகளை திறப்பதிலும், ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும் தீவிரம் காட்டுவர்.

    கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம் நடக்கவில்லை. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் 2004, 05, 06ம் ஆண்டுகளில் 45 ஆயிரம் ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதிய அடிப்படையிலான பணி நியமனம் தானே என அலட்சியம் காட்டாமல், முறையாக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண்களை பெற்ற தகுதிவாய்ந்த இளைஞர்கள், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களாக, பணி அமர்த்தப்பட்டனர்.

    இவர்கள் அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளை பெற்று, திறமையாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கணிசமான ஆசிரியர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களாக, பணியாற்றி வருகின்றனர். இவர்களை 2006ல், பணி நிரந்தரம் செய்து அப்போதைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. ஆனால், 2004 முதல் 2006 வரையிலான, தொகுப்பூதிய காலத்தை, ரெகுலர் பணி காலத்துடன் சேர்க்க வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை, கடைசிவரை, தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.

    மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தங்களை முதலில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி அமர்த்திய ஜெயலலிதாவே, தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என 45 ஆயிரம் ஆசிரியர்களும், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதுபற்றி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் கூறுகையில், "எதிர்காலம் குறித்து, கவலையுடன் இருந்த கால கட்டத்தில், 45 ஆயிரம் இளைஞர்களுக்கு, ஆசிரியர் வேலை கொடுத்தனர். இதை இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். அந்த இரண்டு ஆண்டுக்கு உரிய முறையான சம்பளத்தை கேட்கவில்லை. அந்த காலத்தை, மொத்த பணி காலத்துடன் சேர்த்தால் போதும் என்றே எதிர்பார்க்கிறோம். இதை முதல்வர் செய்தால், 45 ஆயிரம் குடும்பங்களும் பயன்பெறும்" என்றார்.

    1 comment:

    Anonymous said...

    10 years complete. Selection grade so. 45 thousands teachers benefits.