Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 25, 2014

    அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

    ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  

    * நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

    * சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.  

    * மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.  


    * சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

    * கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.  

    * அரசியல் சட்டத்தின் 8- வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படும்.  

    * இலங்கையில் தனி ஈழம் தேவையா என அறிய வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

    * இலங்கையில் இனப்படுகொலை செய்தோர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.  

    * சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத்தர உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    *மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட அதிமுக பாடுபடும்.  * மத்தியில் ஊழலற்ற அரசு அமைய அதிமுக உத்தரவாதம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    * ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.  சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் வரிவிலக்கு அளிக்கப்படும்.

    4 comments:

    Anonymous said...

    கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்ன சேது சமுத்திரத்திட்டம்
    என்னாச்சு

    Anonymous said...

    TETLA CV MUDICHAVANGALUKU POSTING PODUVINGLA? By Mohan

    Anonymous said...

    Please consider to sec.grd.teachers

    Anonymous said...

    Anybody please send corporate body schools how to know junior most teachers. U have any GO or RTI letters please publish very urgent. Sathis sir please consider my request.
    Now trichy teachers are in dangerous situation. Surplus matter going on management to management schools transfer now followed trichy district please help me. Thank u sir.