Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 26, 2014

    மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.

    2 comments:

    Anonymous said...

    Appadinnaa...tn govt employees and teachersoda retirement age 60 aaga increase aaguma...

    C.Sugumar said...

    படு முட்டாள்தனமானது.