மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மேலும் 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதம் ஆனது.
இப்போது வழங்கப்பட உள்ள 10 சதவீத அகவிலைப் படி உயர்வுக்கு நாளை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்குகிறது. அதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து, மத்திய அரசு ஊழியர்கள் 100 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள். இதனால் 50 லட்சம் ஊழியர்களும், 3 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் உயர்வு தற்போது 60 ஆக உள்ளது. இதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
நாளை நடைபெறும் மத்திய மந்திரி சபையில் இதற்கான முடிவும் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மார்ச் 1–ந்தேதி முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மார்ச் 1–ந்தேதிக்குப் பிறகு ஓய்வு பெற இருப்பவர்கள் பயன்படுவார்கள்.
2 comments:
Good....thank God...pls announce above offer also TN govt....soon...
50 வயது போதும். 20 வருட பணிக்கு முழு ஓய்வூதியம் கொடு
Post a Comment