தமிழகத்தில் 2014ல் நடைபெற இருக்கும் அரசு பொது தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும், பள்ளி கல்வித்துறை
இயக்ககங்களை சார்ந்த அனைத்து இயக்குநர்களுக்கான கூட்டம் அரசு தேர்வு துறை இயக்குநரால் கூட்டப்பட்டு, தேர்வு பணிகளை கண்காணித்திட, இணை இயக்குநர்கள் செல்ல வேண்டிய மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி நடைபெறவுள்ள மார்ச்-ஏப்ரல் 2014ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு பணிகளை கண்காணித்திட அலுவலர்கள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டங்கள் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் சென்னை மாவட்டத்திற்கும், பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் பொது தேர்வு பணிகளை கண்காணித்திட நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மூவர் உள்பட 26 மாவட்டங்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வை பணியினை மேற்கொள்ளும் இணை இயக்குனர்களுக்கு உதவியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும். இதில் எவ்வித சுணக்கமுமின்றி பொது தேர்வுகள் நன்முறையில் நடைபெற அரசு தேர்வுகள் துறைக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment