இந்தியாவின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெற உள்ள இயற்பியல் மற்றும் தியரிட்டிகல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கான பி.எச்டி., மற்றும் ஒருங்கிணைந்த பி.எச்டி படிப்புகளுக்கான சேர்க்கைக்கு
அடிப்படையாக உள்ள Joint Entrance Sreening Test (JEST-2013)நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் சேர தகுதியானவர்கள் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
படிப்பின் பெயர்: பி.எச்டி., இன்டிகிரேடட் பி.எச்டி (Physics, Theoritical Computer)
JEST நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். நுழைவுத்தேர்வு பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 17ம் காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.jest.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment