Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 30, 2012

    தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு

    பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு (யு.ஜி.சி.)​சார்​பில் தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு சென்னை உள்​பட நாடு முழு​வ​தும் இன்று (டிசம்​பர் 30) நடை​பெ​று​கி​றது.​மொத்​தம் 77 மையங்​க​ளில் நடை​பெ​றும் இந்​தத் தேர்வை 7.8 லட்​சம் பேர் எழு​து​கின்​ற​னர்.​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ளர் தகுதி பெற புதிய விதி​மு​றை
    ​கள் அமல்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளன.​சென்​னை​யில் 10 தேர்வு மையங்​க​ளில் 12,500 பேர் இந்​தத் தேர்வை எழுத உள்​ள​னர்.​முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை​யி​லும்,​இரண்​டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணி வரை​யி​லும்,​மூன்​றாம் தாள் பிற்​ப​கல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை​யி​லும் நடை​பெ​றும்.​முதல் தாளில் 60 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​இரண்​டாம் தாளில் 50 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​மூன்​றாம் தாளில் 75 கேள்​வி​க​ளும் (150 மதிப்​பெண்)​இடம்​பெ​றும்.​முதல் தாளில் 50 கேள்​வி​க​ளுக்​கும்,​மீத​முள்ள 2 தாள்​க​ளில் அனைத்து கேள்​வி​க​ளுக்​கும் கட்​டா​யம் விடை​ய​ளிக்க வேண்​டும்.​பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 40 சத​வீத மதிப்​பெண்​ணும்,​இதர பிற்​ப​டுத்​தப்​பட்​ட​வர்கள்,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 35 சத​வீத மதிப்​பெண்​ணும் தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.​மூன்​றாம் தாளுக்கு மட்​டும் 75 (50 சத​வீ​தம்)​தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​இதில் இதர பிற்​ப​டுத்​தப்​பட்​டோ​ருக்கு தேர்ச்சி மதிப்​பெண்​ணாக 68 மதிப்​பெண்​ணும் (45 சத​வீ​தம்)​,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 60 மதிப்​பெண்​ணும் (40 சத​வீ​தம்)​நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​புதிய விதி​மு​றை​கள்:​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ள​ரா​கத் தகு​தி​பெற புதிய விதி​மு​றை​க​ளை​யும் பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அமல்​ப​டுத்​தி​யுள்​ளது.​அதன்​படி,​தேர்ச்சி பெற்​ற​வர்​க​ளைக் கொண்டு பாட​வா​ரி​யாக தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும்.​அனைத்​துப் பாடங்​க​ளி​லும் தேர்ச்சி பெற்​ற​வர்​களி​லி​ருந்து முதல் 15 சத​வீ​தம் பேர் மட்​டுமே விரி​வு​யு​ரை​யா​ளர் தகுதி பெற்​ற​வர்​க​ளாக அறி​விக்​கப்​ப​டு​வார்​கள்.​இளம் ஆராய்ச்​சி​யா​ள​ருக்​கான உத​வித் தொகை வழங்க இவர்​களி​லி​ருந்து தனி​யான தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும் என்று பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அறி​வித்​துள்​ளது.​கடந்த தேர்​வில் தேர்ச்சி விதி​மு​றை​களை மாற்​றி​ய​தைத் தொடர்ந்து தேர்வு முடி​வு​களை வெளி​யி​டு​வ​தில் பல்​வேறு பிரச்​னை​கள் எழுந்​தன.​இதைத் தொடர்ந்து,​புதிய விதி​மு​றை​கள் இப்​போது அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.​

    No comments: