Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 30, 2012

    தமிழ் இணைய மாநாட்டில் சிறுவர்களுக்கான பொது அறிவு சிடி

    சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
    தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய சிடி, குழந்தைகளுக்கான சிடி, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்கான சிடிக்கள், மொபைல் மற்றும் மடிகணினிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருள்கள் அச்சு வடிவமைப்பு, முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள், தமிழ் 99 விசைப்படகுகள், விக்கிபீடியா இணைய பக்க வடிவமைப்புகள், கைபேடு மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற பல கணினி கருவிகளில் மென்பொருள்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமச்சீர் கல்வி டிவிடி, ஸ்போக்கன் இங்கிலீஷ், இலக்கணம், பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, லேர்ன் சப்ஜெக்ட் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு சிடிக்கள், கணி திறன் அறிய ஒளிப்பியார்டுகளில் ஏதுவான சிடிக்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கண்காட்சியில் விற்பனை செய்தனர். இதுதவிர குழந்தைகள், நர்சரி பாடல்கள், நல்லொழுக்கக் கதைகள், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் வரலாற்று நூல்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன.

    தினமலர் நாளிதழ் சார்பில் கண்காட்சியில் இணையதளம் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி தொடர்பான செய்திகள், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் உள்ளிட்ட பல கல்வித் தகவல்களை "கல்வி மலர்" இணையதளம் வழங்குகிறது.

    மாநில மற்றும் மத்திய, நிகர்நிலை பல்கலைக்கழங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பற்றி விரிவான விவரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல், மருத்துவம், கால்நடை, கலை அறிவியியல், சட்டம் உட்பட அனைத்துத் துறை சார்ந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

    வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக ஆராய வேண்டிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அது தொடர்பான ஆலோசனைகள் இந்த இணைய தள அரங்கில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். இதுதவிர நாட்டு நடப்புகள், உடனுக்குடன் செய்தி, தேர்வு முடிவுகள் மற்ற இணைய தளத்திற்கு முன்னோடியாக செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

    மேலும், தமிழ் இணைய கல்விக் கழகம், விஷூவல் மீடியா, டெக்லாஜிசிஸ் உட்பட பல மென்பொருள் நிறுவனங்கள் கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்தது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது.

    1 comment:

    கல்விக்கோயில் said...

    11 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் “தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் இணையப் பயன்பாடு” என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தேன். அது பன்னாட்டு தமிழறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தது.