Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 31, 2012

    முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வான ஆசிரியர்கள் தவிப்பு

    முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587
    பணியிடங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றனர். இதில் 2308 பேருக்கு தேர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. இந் நிலையில் இந்த பட்டியலில் தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
    இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினரால் சரி பார்க்கப்பட்டது. இதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    பணி நியமன ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கவுள்ளது. கோர்ட் வழக்கில் தமிழ் வழியில் பட்டம் பயின்றவர்கள், தாவரவியல் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமே பிரச்னை உள்ளது. மற்ற பாடப்பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவேண்டும்.
    பல பாடப்பிரிவுகளில் முதல் பட்டியலில் வெளியான கட்-ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் பட்டியலில் பலருக்கு மதிப்பெண் காட்டப்படாமல் தேர்வில் ஆப்சென்ட் காட்டப்பட்டுள்ளது. மதிபெண் பூஜ்யம் காட்டுகிறது.
    கடினமாக உழைத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியமாக உள்ளது. பலரது வாழ்க்கை பிரச்னையை கவனத்துடன் செயல்படாமல், கண்ணா மூச்சி ஆட்டம் போல ஆடி வருவது தேர்வான ஆசிரியர்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    பெயர் வெளியிட விரும்பாத தேர்வான ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தமிழாசிரியர்கள் காலிப்பணியிடம் 601. இதில் முதல் பட்டியலில் நான் தேர்வு பெற்றுள்ளேன். இரண்டாம் பட்டியலில் 538 பேர் மட்டுமே தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது.
    மீதமுள்ள 63 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகிய போது தேர்வு பட்டியல் ஆன் லைனில் வெளியிடப்படும் அதுவரை காத்திருங்கள், என்கின்றனர். நிறுத்தம் செய்திருப்பதற்கான காரணங்களை தெரிவிக்க மறுக்கின்றனர்.
    இது போன்ற குழப்பம் இல்லாமல் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வரவேண்டும், என்றார்.

    3 comments:

    Anonymous said...

    sir what case going on botany , when will complete case , please update

    Anonymous said...

    s sir he said 100% true information sir.in pg trb notification the board notified that cv candidate will be called on the basis of written examination mark.at the same time the no of candidate called for cv is slightly highen than the no of vacancies.

    BALA said...

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முழுமையான தேர்வுப் பட்டியல் ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண், ஜாதி மற்றும் பிறந்த தேதி விவரங்களும், தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்படாததற்கான காரணமும் இந்தப் பட்டியலுடன் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாவரவியல் பாட ஆசிரியர்கள் 204 பேர் உள்பட தகுதியான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய இரண்டாவது தேர்வுப் பட்டியலும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    2,890 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே மாதம் நடைபெற்றது. நீதிமன்ற வழக்குகள், சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் போன்றவற்றால் 2,300 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது.

    தாவரவியல் ஆசிரியர்கள், தமிழ் வழி முன்னுரிமை கோரும் பணி நாடுநர்கள் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இவர்களுக்காக சுமார் 600 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    புதிதாக பணி நியமனம் பெற்ற 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடக் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

    தாவரவியல் ஆசிரியர்கள் உள்பட தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு திங்கள்கிழமை நேரில் வந்தனர்.

    பணி ஆணை பெற்றும் பட்டியலில் இடம்பெறவில்லை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காதர் என்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிறகு, அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 103 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால், பணி நியமன ஆணை வழங்கிய பிறகு இப்போது தகுதி பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

    பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 5 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஐந்தாவது இடத்தையும் நிரப்பினால் நான் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுவேன் என்று அவர் தெரிவித்தார்.

    ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் இறுதிப்பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாவரவியல் தாமதம் ஏன்? எம்.எஸ்சி., (தாவரவியல்) படிப்புக்கு இணையான படிப்பாக எம்.எஸ்சி., (தாவர உயிரியல்), (தாவர உயிரி தொழில்நுட்பவியல்) ஆகிய படிப்புகளைக் கருதி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், தாவரவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாவரவியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் ஜனவரி 2-ம் தேதிக்குள் பணி நியமனம் பெற்றுவிடுவார்கள். எங்களது பதவி உயர்வு போன்றவை பாதிக்கப்படும். விரைவாக தாவரவியல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

    போட்டித் தேர்வு எழுதியவர்களில் மேற்கண்ட படிப்புகளை முடித்தவர்கள் இருந்தால், அவர்களையும் தாவரவியல் பாட ஆசிரியர் பணிக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, இந்த நியமனத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு தாவரவியல் பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாநகராட்சிப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதுநிலை ஆசிரியர்களும் இரண்டாவது பட்டியலில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.

    விடுபட்டுள்ள ஓரிரு தகுதியான ஆசிரியர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.

    தமிழ் வழி முன்னுரிமை கோரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் சான்றிதழ் முழுமையாக சரிபார்க்க வேண்டியுள்ளதால், அந்த நியமனம் மட்டும் சற்று தாமதமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.