கிருஷ்ணகிரி அடுத்த கக்கன்புரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை, தனியார் கட்டுமான நிறுவனத்தின் அறக்கட்டளை தத்தெடுத்து, இரண்டு கோடியே, ஏழு லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டி கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி அடுத்த கக்கன்புரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 34 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இந்த பள்ளியை, கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் கே.இ.எப்., ஹோல்டிங்ஸ் கட்டுமான நிறுவனத்தின், பைசல் மற்றும் ஷபானா அறக்கட்டளை மூலம் தத்தெடுக்கப்பட்டு, இரண்டு கோடியே, ஏழு லட்சம் ரூபாய் செலவில், புதிய இரண்டடுக்கு கட்டடம் கட்டி கொடுத்துள்ளனர்.
இந்த கட்டடத்தில், ஐந்து வகுப்பறைகள், ஒரு விளையாட்டு அறை, ஒரு தலைமை ஆசிரியர் அறை, இரண்டு நர்சரி வகுப்பு அறைகள், ஒரு சமையல் அறை என, தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில், மிக நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு நவீன கழிப்பறைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்த பழைய பள்ளி கட்டடத்தை புதுப்பித்து, கம்ப்யூட்டர் லேபாக மாற்றியுள்ளனர்.
இந்த நவீன கட்டடத்தை, நேற்று காலை, 8:30 மணிக்கு, ஸ்டேண்டார்ட் சார்ட்டர்டு வங்கியின் துணை தலைவர் ரிச்சர்டு பட்டேல் திறந்து வைத்தார். மேலும், கே.இ.எப்., நிறுவனத்தின் தலைவர் பைசல் கொட்டிகொலன் விழாவில் பங்கேற்றார்.
விழாவில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது
இந்த அறக்கட்டளை, குறுகிய காலத்தில் கட்டி முடித்த பள்ளியின் இறுதி தோற்றத்தை பார்க்கும் போதே பிரமிக்க வைக்கிறது. பள்ளி கட்டடத்தை பார்க்கும் குழந்தைகள், பள்ளிக்கு வருவதை மிகவும் விரும்புவர்.
இந்த அறக்கட்டளை என்னேகோல் பஞ்.,ல் உள்ள, எட்டு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment