பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தக கட்டுகளை ஆசிரியர்கள் சுமக்கும் பிரச்னை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. ’புத்தகங்களை கல்வித் துறையே வினியோகிக்கும்’ என, அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த, ஆசிரியர் சங்க கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை, நிதி நிலைமை, சூழலுக்கு ஏற்ப தீர்க்க முயற்சிப்போம். அரசு அறிவித்துள்ள, மாணவர்களுக்கான, 14 இலவச திட்டங்களின் பொருட்களை எடுத்து வந்து, வினியோகம் செய்வதில் சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறினர்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், 14 வகை இலவச திட்டங்களுக்கான பொருட்களை, அரசே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கும்.
மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளி, ரத்த வகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய, ’ஸ்மார்ட் கார்டு’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தேசிய, சர்வதேச அளவில் தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். புதிய கல்வி ஆண்டில் பாடப் புத்தகங்களில் மாற்றம் இல்லை.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்ததும், லேப் - டாப் வழங்கப்படும். தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்திருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நிதி இல்லை : அமைச்சர் வருத்தம்கலந்துரையாடல் கூட்டத்தில், ’அரசு பள்ளிகளில், யோகா பயிற்சிக்கு, 13 ஆயிரம் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது ஏன்; பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம்’ என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறினார்.
இதற்கு பதிலளித்த, அமைச்சர் செங்கோட்டையன், ”13 ஆயிரம் பேர், யோகா பயிற்சி முடித்து, இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா கற்றுத்தர தயாராக உள்ளனர். அரசிடம் நிதி இல்லை; எனவே, கூடுதல் செலவின்றி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது,” என்றார்.
No comments:
Post a Comment