பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கவுஹாத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பரீட்சையில் தோல்வி அடையும் மாணவர்-மாணவி அதே வகுப்பில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
அனைத்து மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநில கல்வி அமைச்சர்களுடன்ஆலோசனை நடத்தியபின்னர் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் அவை அமல்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்தபத்தாண்டுகளாக NCERT பாடப்புத்தகங்கள் திருத்தப்படவில்லை என்பதால் பெற்றோர், ஆசிரியர்,மற்றும் கல்வித்துறையினரின் ஆலோசனையின் பேரில் பாடப்புத்தகங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் ஜவடேகர்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment