திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கணேசன் தலைமையில் நடந்தது.
பல்வேறு கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் கணேசன் கூறுகையில் தங்கள் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பின் அவர்களை பற்றிய தகவல்களை வட்டார வள மையத்தில் தெரிவித்தால் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment