ஒருவர், அறிமுகமில்லாத முன்பின் தெரியாத நபரிடம் பேச முற்பட்டாலும், அதனை தடுக்கும் உள்உணர்வே கூச்சம்! கைகுலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, பலருக்கும், இன்று கூச்ச சுபாவம் வெளிப்படுகிறது. இதனால், பலர் தங்களுக்கான பிரகாசமான வாய்ப்புகளை இழக்கின்றனர்.
கூச்சத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:
* கூச்சம், அறிமுகமில்லாதவரிடம் 8 நிமிடங்கள் வரையும் அறிமுகமானவர்களிடம் 5 நிமிடம் வரையும் இருக்கும். அந்த நிமிடங்களை தைரியமாக தாண்டி விட்டால் கூச்சம் ஓடிவிடும்.
* கூச்சத்திற்கு அவரவரேதான் முழு முதற் காரணம். ஏனேனில் பிறக்கும் போதே யாரும் கூச்ச சுபாவத்துடன் பிறப்பதில்லை.
* கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சவுகரியத்திற்காக அவர்களே வளர்த்து கொள்ளும் குணம் என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.
* ’நல்லவனாக இரு; ஆனால் நல்லவன் எனக் காட்டி கொள்ளாதே’ என ஒரு பொன் மொழி உண்டு. நல்லவன் என பெயர் எடுத்த பின்பு ஏதேனும் பேசினால் தப்பாக எண்ணுவார்கள் என எண்ணி பலர் தங்கள் கருத்துக்களை கூறுவதே இல்லை. இந்த எண்ணத்தை தகர்த்தெரிய வேண்டும்.
* கண்ணாடி முன் நின்று நமது கண்ணை நாமே நேருக்கு நேர் பார்த்து பேசிப் பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
* யாரையாவது சந்திக்க செல்வதற்கு முன்பு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? அவர் இப்படி பதில் சொன்னால், அடுத்து எப்படி பேச்சைக் கொண்டு செல்வது என வீட்டிலேயே பயிற்சி எடுத்து கொள்வது நலம்.
* வாசிப்புப் பழக்கம் கூச்சத்தைப் போக்கும். நிறைய வாசியுங்கள். தன்னம்பிக்கை புத்தகங்கள் தைரியத்தை கொடுக்கும்.
* பொது நிகழ்வுகளில் பங்கேற்பதும், பொறுப்பேற்று கொள்வதும் கூச்சம் போக்கும் நல்ல வழிகள்.
* குழுக்களிடம் பேசும் போதோ, மேடை ஏறும்போதோ நமக்கு முன் இருப்பவர்கள் நம்மைப் போல் சராசரி மனிதர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, வாழ்க்கையில் தவறு செய்ய மட்டும் கூச்சப்படுங்கள். மற்ற விசயங்களில் கூச்சத்தை தூக்கி எறியுங்கள்! சிரமம் இன்றி எதுவுமில்லை; சிரமம் என்பது எதுவுமில்லை!
-மு.தென்னவன்.
No comments:
Post a Comment