தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தக் குழுவின் தலைவராக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2015-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நீதிபதி டி.வி.மாசிலாமணி நியமிக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment