மீசல்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது. தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 'இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்' என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை.
பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி, தடுப்பூசி போட ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில், 1.77 கோடி பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 44 சதவீதம் பேர் மட்டுமே, தடுப்பூசி போட்டனர். எனவே, தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்றினை ரத்து செய்ய, சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சுகாதாரச்சான்றுரத்து செய்யப்பட்டால், நடப்பாண்டு, பள்ளி களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க இயலாது.சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட காலகட்டங்களில், பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
'இது, 1939ன், பொது சுகாதார திட்டத்தின், பிரிவு, 76, சட்டப்படி, கட்டாயமாகும். எனவே, தட்டம்மை தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச்சான்று ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர்
No comments:
Post a Comment