பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகையை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத் தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 1ம் வகுப்பு முதல் 12வது பயிலும் மாணவர்களின், வருவாய் ஈட்டும் தந்தை, தாய் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந் தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 31 மாணவ, மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் தலா 75 ஆயிரம் ரூபாய் வீதம் 6 மாணவர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், நேர்முக உதவியாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பல ரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment