இன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால் அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு: மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறினால், ரூ.1000 மட்டும் வசூலித்து கொண்டு அவர்கள் கட்டிய மிச்ச பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்களிடம் எஞ்சிய பணத்தை வசூலிக்கக்கூடாது.
மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட டிபாசிட் மற்றும் அவர்களின் சான்றிதழ்களை 7 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண தொகையில் இரு மடங்கு வசூலிக்கப்படும். கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment