கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதன்படி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,183 பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன. மேலும் விவரங்களை தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
No comments:
Post a Comment