’நிகர்நிலை பல்கலைகள், ஆராய்ச்சி மாணவர் விபரங்களை, இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்’ என, பல்கலைகழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, பல்கலைகழக மானிய குழுவான, யு.ஜி.சி., உதவித்தொகை வழங்கி வருகிறது.
இந்நிலையில், நிகர்நிலை பல்கலைகள், கல்லுாரிகள், தங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் பட்டியல் மற்றும் விபரங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியது.
இருந்தும், பல பல்கலைகள், மாணவர்கள் பட்டியலை, யு.ஜி.சி.,க்கு மட்டும் அனுப்பி விட்டு, இணையதளத்தில் வெளியிடவில்லை.
இதையடுத்து, ’அனைத்து நிகர்நிலை பல்கலைகளும், தங்களது ஆராய்ச்சி மாணவர்கள் பட்டியலை, இணையதளத்தில், இரு மாதங்களுக்குள் வெளியிட்டு, அதன் இணைய, ’லிங்க்’ முகவரியை அனுப்ப வேண்டும்; அவை ஆய்வு செய்யப்படும்’ என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. அதனால், பல்கலைகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
No comments:
Post a Comment