Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Monday, March 13, 2017

  டி.இ.டி., வெற்றிக்கு ஆழ்ந்த படிப்பு, சிந்தனை திறன் அவசியம் !

  ’ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற ஆழ்ந்த படிப்பும், சிந்தனைத் திறனும் அவசியம்’ என தினமலர் சார்பில், மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த ஆலோசனை முகாமில் வல்லுனர்கள் தெரிவித்தனர்.


  ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் இளங்கலையுடன் பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்த டி.இ.டி., தேர்வுகள் ஏப்.,29, 30ல் நடக்கின்றன.

  இத்தேர்வு எழுதுவோர் எவ்வாறு தயாராக வேண்டும், அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாட வாரியாக, ஆலோசனைகளை வல்லுனர்கள் தெரிவித்தனர். 

  அதன் விபரம்

  பொது அறிவுவெங்கடாசலம், நிர்வாக இயக்குனர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங், மதுரை: பொதுத் தேர்வு போல் அல்லாமல் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஆழ்ந்த படிப்பு, திட்டமிடல், தெளிவான சிந்தனையுடன் தேர்வுக்கு தயாராக வேண்டும். 

  புத்திக்கூர்மையை சோதிக்கும் வினாக்கள் அதிகம் இடம் பெறும். மொத்தம் 150 வினாக்களில், தாள் 1 மற்றும் தாள் 2ல், தமிழ் -30, ஆங்கிலம்-30, குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தலில்-30 வினாக்கள் பொதுவாக கேட்கப்படும்.

  தாள் 1ல் கணிதம் - 30, சூழ்நிலையியல்- 30 வினாக்களும்; தாள் 2 அறிவியல் பிரிவில், அறிவியல் மற்றும் கணிதம் 60 வினாக்களும்; கலை பிரிவில் சமூக அறிவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் பகுதியில் 60 வினாக்களும் கேட்கப்படும். அன்றாட நிகழ்வுகளை குறிப்பெடுத்து வந்தால், பொது அறிவு வினாக்களுக்கு எளிதில் விடை அளிக்கலாம்.

  வாழ்க்கை கணிதம், நடைமுறை கணிதம், அடிப்படை அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் பகுதியில் கட்டாயம் வினாக்கள் இடம் பெறும். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை புத்தகங்களில் பாடங்களை வரிசைப்படுத்தி படித்தல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை பிரித்து அறிந்து புரிந்து படித்தல் வேண்டும்.

  ஆங்கிலம்வெங்கடாசலபதி, ஓய்வு ஆசிரியர், மதுரை: புரிந்து படித்தால் ஆங்கிலம் மிக எளிது. இலக்கண பகுதியில் தெளிவாக இருந்தால் ஆங்கிலத்தில் 30 மதிப்பெண் எளிதில் பெறலாம். 6 முதல் 10ம் வகுப்பு வரை புத்தகங்களில் இடம் பெற்ற இலக்கணப் பகுதி வினாக்களில், நன்றாக பயிற்சி பெற வேண்டும். 

  ’பாராகிராப்’ கொடுத்து வினாக்கள் எழுதும் பகுதியை, தெளிவாக படித்த பின் விடை அளிக்க வேண்டும். குறிப்பாக பெயர்ச்சொல், பிரதி பெயர்ச்சொல், இணைப்பு சொல், செய்வினை, செயப்பாட்டு வினை, ஆர்டிக்கல், பிரிபோசிஷன் ஆகிய பகுதிகளில் எடுத்துக்காட்டுகளுடன் பயிற்சி பெற வேண்டும். 

  ஆங்கில வார்த்தைகளை உரிய சப்தத்துடன் உச்சரித்தால் தான் சரியான விடை அளிக்க முடியும்.குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பிரகாஷ், முதல்வர், டி.வி.எஸ்., ஆசிரியர் பயிற்சி அகாடமி, மதுரை: இப்பகுதி வினாக்களை கவனத்துடன் எழுத வேண்டும். 

  ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்டவை விடையாக இருக்கும் வகையில் வினா அமைப்பு இருக்கும். கல்வி உளவியலின் தன்மை, மனித வளர்ச்சி மற்றும் மேம்பாடு, மரபு சூழ்நிலை, குழந்தை வளர்ச்சி நிலைகள், அறிதிறன் வளர்ச்சி, சமூக எழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி, கற்றல், நுண்ணறிவு மற்றும் ஆற்றல் திறன், ஊக்கப்படுத்துதல் மற்றும் குழு நடத்தை, ஆளுமை பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். 

  இதற்கு ஆழமாகவும், ஒப்பிட்டும் படித்தல் முறை அவசியம். குறிப்பாக உளவியல் கோட்பாடுகள், வகைகள், வரையறைகள், குழந்தை பருவப் பிரச்னைகள் பகுதிகளை தெளிவாக படித்தால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு ஏற்படும்.

  தமிழ் செந்தில்குமார், உதவி பேராசிரியர், மன்னர் கல்லுாரி, மதுரை: தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் எளிதில் பெறலாம். கவனமின்மையால் இப்பகுதியில் இழக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மொத்த மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  அரை மணிநேரத்திற்குள் இப்பகுதி எழுதி, அதில் சேமிக்கும் நேரத்தை கணிதம், அறிவியல் பகுதிகளுக்கு பயன்படுத்தலாம். நன்றாக படிக்கும் சிலர் அவசர மற்றும் ஆர்வக்கோளாறால் தவறான விடை எழுத வாய்ப்பும் உள்ளது. இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும். 

  இதற்கு ஆறு முதல் பத்து மற்றும் பிளஸ் 2 வரையான புத்தகங்களில் இடம் பெற்ற இலக்கண பகுதியை நன்று படித்தல் வேண்டும். இலக்கியத்தில் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, காப்பிய மற்றும் பக்தி இலக்கியம், பாடலாசிரியர்கள், கவிஞர்கள் விபரம் குறித்து தெளிவாக படித்தல் வேண்டும்.

  No comments: