”தமிழகத்தில், நீட் தேர்வு வரக்கூடாது, இதற்காக அரசு முழுமையாக செயல்படுகிறது,” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசினார். ஈரோடு மாவட்டம், கோபியில், வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ’நீட்’ தேர்வுக்கு விலக்கு அளித்து, சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் நலன் காக்கவும், ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அதற்காக இந்த அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. பிரதமரை முதல்வர் சந்தித்த போது, முன் வைத்த, 16 கோரிக்கைகளில், நீட் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடமும், இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ’நீட்’ என்ற நிலை, தமிழகத்தில் வரக்கூடாது. இதற்காக அரசு முழுமையாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment