சேலம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில், மார்ச், 8 முதல் துவங்க உள்ள, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 508 அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த, 25 ஆயிரத்து, 855 மாணவர்கள், 23 ஆயிரத்து, 876 மாணவியர் என, 49 ஆயிரத்து, 731 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக, 142 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், எட்டு தேர்வு மையங்களில், தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். 3,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணை, சம்பந்தப்பட்ட மைய கண்காணிப்பாளர்களிடம், நேற்று வழங்கப்பட்டன.
அவற்றை, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், 6 அன்று மதியம், 2:00 மணிக்கு, மையத்தில் நடக்கும் முன்னேற்பாடு கூட்டத்தில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மையத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், மையப்பணிக்கு போதுமான அளவில் உள்ளனரா என்பது குறித்த அறிக்கையை, அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment