பெண்கள் மேம்பாட்டிற்காக, உறுதியுடன் இருக்கவேண்டும்’ என சர்வதேச மகளிர் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், (டயட்) இந்திய தேசிய குடும்ப நலச்சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
பயிலக முதல்வர் தேவராஜ் தலைமை வகித்தார். இந்திய குடும்ப நலச்சங்க நீலகிரி கிளை மேலாளர் வரதராஜன், ’மாற்றத்துக்கான உறுதியுடன் இருப்போம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், ஒவ்வொரு, 53 நிமிடத்திலும், ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறாள். ஒரு நாளில், 53 பேர் குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு, 42 நிமிடத்திற்கும், ஒரு வரதட்சணை மரணம் நடக்கிறது.
வழக்குப்பதிவு செய்யாமலும், வெளிச்சத்திற்கு வராமல் நடக்கின்ற நிகழ்வுகளை கணக்கிட்டால், குற்றங்களின் சதவீதம் அதிகமாக உள்ளது. உழைக்கும் பெண்களில், 11 சதவீதம் பேர் மட்டுமே, ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளில் பணி புரிகின்ற நிலையில், 89 சதவீதம் பேர் அமைப்பு சாராத பணி உறுதி, உத்திரவாதம் இல்லாத துறைகளில் பணிபுரிகின்றனர்.
பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி, தினந்தோறும் வந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த காரணங்களால், பெண்கள் மேம்பாட்டிற்காக, உறுதியுடன் இருக்கவேண்டும். இவ்வாறு, வரதராஜன் பேசினார்.
தொடர்ந்து, இந்திய குடும்ப நலச்சங்க நிகழ்ச்சி குழு தலைவர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், ஆளுமைத்திறன் பயிற்சி நடத்தப்பட்டு, வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பயிலக மாணவியர், 35 பேருக்கு ரத்த சோகை மற்றும் மார்பக சுய பரிசோதனை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், ’டயட்’ மாணவியர் உட்பட, ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, பயிலக துணை முதல்வர் இளங்கோ வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை, இந்திய குடும்ப நலச்சங்க திட்ட அலுவலர் ராஜேஷ் மற்றும் பயிலக விரிவுரையாளர் வசந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment