பிளஸ் 1 தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது; முக்கிய பாடங்களுக்கு முன்னுரிமை தந்து, தேர்வு அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், நாளை மறுதினம் (9ம் தேதி), பிளஸ் 1 தேர்வுகள் துவங்குகிறது. வழக்கமாக, முதலில் மொழிப்பாடமும், அதை தொடர்ந்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறும். இம்முறை, முதலில் முக்கிய தேர்வுகள் நடக்கிறது.
அதன்படி, வரும், 9ல் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் மற்றும் வேளாண் தேர்வுகள்; வரும், 14ல், இயற்பியல், வணிகவியல் தேர்வு; 15ல் தமிழ் முதல்தாள்; 16ல் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறவுள்ளது.
கடைசி இரண்டு தேர்வுகளாக, வரும், 28 மற்றும், 30ம் தேதிகளில், முறையே ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடக்கவுள்ளது. பிளஸ் 1 தேர்வு மதியம், 2:00 மணிக்கு துவங்குகிறது.
வினாத்தாள் படிக்க, பத்து நிமிடம் மாணவர்களுக்கு வழங்கப்படும்; 2:10 முதல், 2:15 வரை, ஐந்து நிமிடம் விடைத்தாள் பூர்த்தி செய்ய வேண்டும். 2:15 முதல், 5:15 வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும்.
No comments:
Post a Comment