தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது நாளை புதன்கிழமை (மார்ச் 8) தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்விற்கான முன்னேற்பாடு பணிகளை கல்வித் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9,94,167 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 4,98,383 மாணவர்களும், 4,95,784 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர 39,741 பேர் தனித்தேர்வில் கலந்து கொள்கிறார்கள். மேலும், 224 சிறைக்கைதிகள் தேர்வெழுத உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51,658 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.
தேர்வு அட்டவணை:
மார்ச் 8 (புதன்) தமிழ் முதல் தாள்
மார்ச் 9 (வியாழன்) தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 14 (செவ்வாய்) ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 16 (வியாழன்) ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 20 (திங்கள்) கணிதம்
மார்ச் 23 (வியாழன்) அறிவியல்)
மார்ச் 28 (செவ்வாய்) சமூக அறிவியல்
மார்ச் 30 (வியாழன்) விருப்ப மொழித்தாள்
தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment