பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1 ல் துவங்குகிறது.பிளஸ் தேர்வு மார்ச் 2ல் துவங்கி மார்ச் 31 வரை நடக்கிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கி மார்ச் 30 வரை நடக்கிறது. பிளஸ் தேர்வு முடிவு மே 12, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ல் வெளியாகிறது.
இதனால் இரு வகுப்புகளுக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை ஒரே சமயத்தில் துவங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்.,1 ல் துவங்கி ஏப்., 15 க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், விடைத்தாள் அதிகமாக இருந்தால் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். ஆனால், தற்போது குறித்த நாட்களுக்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment