ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 'தாட்கோ' மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு, ஏப்., 29 மற்றும் 30ல் நடக்க உள்ளது.
எனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகமான, தாட்கோ மூலம், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் சேர, உரிய கல்வித் தகுதியுடன், 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், http://training.tahdco.com என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்பங்களை, பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment