திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11 அரசு பள்ளிகளில் "இன்டர்நெட்" வசதியுடன் கம்ப்யூட்டர் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அரசு நடுநிலை மற்றும் உயர் நிலை பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை தேர்வு செய்து "ஆன் லைன்", "வீடியோ கான்பரன்ஸ்" (வயர்லெஸ் இன்டர்நெட்) மூலம் வகுப்பறைகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் வட மதுரை, நத்தம், ரெட்டியார் சத்திரம், குஜிலியம்பாறை ஒன்றியங்களில் தலா ஒரு நடுநிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு கம்ப்யூட்டர், மைக், கேமரா உள்ளிட்ட கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதே போல், பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் நிலை, மேல் நிலை பள்ளிகள் ஏழு தேர்வு செய்யப்பட்டு கம்ப்யூட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இவை பொருத்தப்பட்டால் பள்ளியில் இருந்தபடியே இணையதள கல்வியாக சென்னையில் உள்ளவர்களிடமும் சந்தேகங்கள் கேட்கலாம். நாம் நடத்தும் பாடங்களை அவர்கள் அங்கிருந்த படியே கவனிக்க முடியும்.
மேலும் கணக்கு, அறிவியல், மொழிப்பாடம், வரலாறு உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்பட உள்ளன. சி.டி. மூலமும் பொது நிகழ்வுகள், விளையாட்டு, அறிவியல் திறன் குறித்து பார்க்கலாம். இதன் மூலம், மாணவர்களின் கல்வி திறன், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக வளர்ச்சியடையும்.
No comments:
Post a Comment