
ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்தது. பா.ஜ., இதுவரை இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, வசுந்தரா ராஜே முதல்வராக பொறுப்பேற்றார்.இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள வசுந்தரா, மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் நற்பெயரை தக்க வைத்து கொள்ள, மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை
கண்டித்து, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் வசுந்தரா, மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்காக தானே நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
நேற்று முன்தினம், தவுல்பூர் மாவட்டம் முகல்புரா கிராமத்திற்கு சென்ற வசுந்தரா, அங்குள்ள அரசுப் பள்ளியில், திடீர் சோதனையில் ஈடுபட்டார். அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடிய முதல்வர், அவர்களின் கல்வித் தரம் மற்றும் ஆங்கில அறிவை சோதித்தார். மாணவர்களிடம் உரையாடியதில், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் அறவே வராதது தெரிந்தது. இதையடுத்து, தானே நேரடியாக வகுப்பெடுக்க தொடங்கினார்.ஆங்கில எழுத்துக்கள் தொடங்கி, இலக்கணம் வரை, ஒரு முழு நேர ஆசிரியரைப் போல், மாணவர்களுக்கு முழு சிரத்தையுடன் பாடம் எடுத்தார். பின், பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கப்படும், மதிய உணவின் தரம் குறித்து சோதனையிட்ட முதல்வர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அதே உணவை தானும் சாப்பிட்டார்.முதல்வரின் வருகை குறித்து முன் அறிவிப்பு ஏதும் தரப்படாததால், பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட, அனைத்து ஆசிரியர்களும், முதல்வர் வசுந்தராவின் நடவடிக்கையால் அதிர்ந்து போயினர்.
2 comments:
Great madam.
U r so simple.dharun
Post a Comment