ஆசிரியர் உரிமை இயக்கத்தின் இரண்டாம் கட்ட கூட்டம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (16.2.2014) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தினை ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இளங்கோ சிறப்பாக செய்திருந்தார். பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த கிட்டதட்ட 10ற்கும் மேற்பட்ட இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்கக்கல்வி துறையை பொறுத்த மட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டும் பங்கேற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் வட்டங்களை அடிப்படையாக கொண்டு வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சட்ட ஆலோசகர் நியமிக்கப்பட்டார். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வருகிற 28.2.2014 அன்று சிவகங்கையில் மாபெரும் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவாற்றப்பட்டது.
No comments:
Post a Comment