பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., விரைவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ஐ.பி.எம்., தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சர்வதேச அளவில் பிரபலமானது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை தயாரித்து விற்பனை செய்வதுடன் ஏராளமான நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் சேவையையும், இந்த நிறுவனம் செய்து வருகிறது.
உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் நான்கு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சமீப காலமாக, இந்த நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளதாக, தகவல் வெளியானது. இந்நிலையில், சிக்கன நடவடிக்கையாக உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 15,000 பேரை வேலையை விட்டு நீக்குவதென, இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் கிளைகளில் கணிசமானோரை வீட்டுக்கு அனுப்ப, இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எம்., நிறுவனத்தின் சர்வதேச பணியாளர் ஒருங்கிணைப்பாளர் லீ கான்ராட், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் உள்ளவர்களில், கணிசமானோர் முதல் கட்டமாக, அதிரடி நடவடிக்கையில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment