Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 13, 2014

    15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு

    "தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில், அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்" என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


    தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.எட்.,) ஆசிரியர்கள், தஞ்சையைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர்.

    தொடர்ந்து இவர்கள் அளித்த மனுவை கலெக்டர் சுப்பையன் வேறு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் பிரிவு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

    மேற்கண்ட கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.எட்.,) படிப்பு முடித்து விட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் பாதித்து, குடும்பம் நடத்த வழியின்றி தவிக்கின்றனர்.

    அரசு பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இவற்றில் போதுமான காலிப்பணியிடங்கள் இருந்தும், அப்பணியிடத்தில் வேலையில்லா பட்டதாரிகளை பணி நியமனம் செய்யாமல், காலம்தாழ்த்தப்பட்டு வருகிறது.

    அதனால் போதுமான கம்ப்யூட்டர் அறிவு இல்லாமலேயே மாணவ, மாணவியரும் மேற்படிப்பை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் புதிதாக உருவாக்கப்படும் என, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், பாடப்பிரிவை உருவாக்காமல் உள்ளனர்.

    நடப்பு 2014-15ம் கல்வியாண்டு முதல், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்து, வேலையின்றி தவிக்கும் 15 ,000 பட்டதாரி ஆசிரியர்களை (பி.எட்.,) அரசு பணியில் நியமிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கையை முதல்வர் ஜெ., நிறைவேற்றி, பணிவாய்ப்பின்றி தவிக்கும் 15,000 பேர்களுக்கு, மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    10 comments:

    kannan said...

    yes, it's true. Tamilnadu government think about the 15000 teacher family life. pls consider our life, we will expect good result for coming AY by Honorable Chief Minister Miss J.Jayalalitha.

    Anonymous said...

    arasiyal vathi pasanga mattum padicha pothum pa .nama pasanga computer padikanumnu avnaguluku akkarai illapa. intha arasiyeil vathigaludo pasanga first governmt schoola sekanum .appa then education nalla irukum .

    Anonymous said...

    24th pani niyamana aanai kodukiranga endru or tommorrow selection list velivituduvanga ithu unmai

    Anonymous said...

    Ithu unmaya

    Unknown said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    Epti solrenga?

    Anonymous said...

    Above 80 mela weight age ullavankaluku potuvangalo? Tell me?

    Anonymous said...

    105 to 126 varaikum paper 2 LA ethanai Peru irupanka? Avangaluku first finalist podalame; then 82 to 104 podalamla

    Anonymous said...

    105 to 126 varaikum paper 2 LA ethanai Peru irupanka? Avangaluku first finalist podalame; then 82 to 104 podalamla

    Anonymous said...

    Ada pongapa ipadiye seven years poidochi ella govt schoolaium computer iruku but teacher illa onnuthukum odhavaadha subjectku ellam exam iruku ellathukum use agara computerku vela illa ena govtmt to po paa paysama indha 7 yearla wayra degree mudichi to irukalam