Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 12, 2017

    தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி? ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா? அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை...

    நியூட்டன் அறிவியல் மன்றம் 

    MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!

    1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.


    2) இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி  அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள்  நீக்கப்படும்.


    3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய  மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும்  குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC  மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும். 

    அதுபோல  50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

    4) இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு  மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும். 

    5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
     நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
    மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் 
    தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்  பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும். 

    6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்

    பொதுப்பிரிவின்   QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)

    PERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

    7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள்  பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்
    பதியப்படும்.

    8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

    9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள  இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.

    10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய  85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை 
    பூர்த்தி செய்ய வேண்டும்.

    அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
    (domicile status: Tamilnadu)

    ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
    பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.   

    11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.

    12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 
    மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.

    13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 
    முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது
    45 சதம் ஆகும்.

    14) இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே 
    அல்லாமல் வேறு எப்படியும் அல்ல.

    பின்குறிப்பு-1: தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
    பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச் 
    சான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத்  தேவையில்லை

    பின்குறிப்பு-2: பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE  சமர்பிக்க வேண்டும்.

    No comments: