மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று (மே 3) துவங்குகிறது. இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், ஆய்வக உதவியாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்ட கல்வி அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனச்சுமையை தவிர்க்கவும், கல்வியாண்டை உத்வேகத்துடன் துவங்கும் வகையிலும் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைக்கிறார். கல்வி மேம்பாடு, நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் ஒடிசா கூடுதல் தலைமை செயலர் பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இறையன்பு, விஜயகுமார், தாரேஷ் அகமது, நந்தகுமார், எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், டாக்டர் கு.சிவராமன், பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் கல்வியாளர் பேசுகின்றனர். நாகமலைபுதுக்கோட்டை பில்லர் ஹாலில், நிகழ்ச்சி நடக்கிறது. மே 5 நிறைவு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கிறார், என்றார்.
No comments:
Post a Comment