கல்வித் துறைக்கு எதிரான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காகஅதிகாரிகள், ஆசிரியர்கள்தங்களின் இரட்டிப்பு உழைப்பை வழங்க வேண்டும்," என அத்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ., -டி.இ.ஓ.,க்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாம் துவங்கியது. எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் அறிவொளி வரவேற்றார். ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். கலெக்டர் வீரராகவ ராவ், முதன்மை கல்விஅலுவலர் ஆஞ்சலோ இருதய சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
பயிற்சியை துவக்கிவைத்துஉதயச்சந்திரன் பேசியதாவது:கல்வித்துறை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விட, இதுவரை என்ன செய்யவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மாணவர்களை சிந்திக்க வைக்கும் களமாக கல்வித்துறை இருக்க வேண்டும்.
இதற்கு, 'வகுப்பறை ஜனநாயகம்' முக்கியம். கல்வி அதிகாரிகளுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை செயல்படுத்தலாம். உயர் அதிகாரிகளின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டலாம். சர்வாதிகாரி களாக மட்டும் இருக்க கூடாது.
அரசு பள்ளி வகுப்பறைகள் தரமான மாணவர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் தனித்திறமைகளை கண்டறிந்து, எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர் விளங்க வேண்டும். மதிப்பெண், தனித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இனிமேல் சிறந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத்துறை மற்றும் ஆசிரியர் தரம் குறித்து பல்வேறு விமர்
சனங்கள் எழுப்பப்படுகின்றன. நீதிமன்றமும் விமர்சிக்கிறது. இதுபோன்ற விமர்சனங்களுக்கு முடிவுகட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வகுப்பறைகளில் அறிவுசூழல் நிறைந்திருக்கும் வகையில் அதிகாரிகள், ஆசிரியர்கள் தங்களது இரட்டிப்பு உழைப்பு, ஆலோசனையை வழங்க வேண்டும், என்றார். இணை இயக்குனர் குமார் நன்றி கூறினார்.
'ரிசல்ட்' ஆச்சரியம்! : செயலாளர் உதயச்சந்திரன் பேசுகையில், "மதிப்பெண்ணை நோக்கிய பயணம் பெற்றோரை ஆட்டிப்படைக்கிறது. பெற்றோரின் மருத்துவம், பொறியியல் படிப்பு கனவை மாற்றஆசிரியர்கள் முன்வர வேண்டும். இரண்டு படிப்பை தவிர, அரசு மற்றும் அரசு சார்ந்த 63 படிப்புகள் உள்ளது குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் அதே நாளில், கல்வித்துறையில் ஆச்சரியப்பட வைக்கும் முடிவுகளும் வெளியாகும்," என்றார்.
No comments:
Post a Comment