’பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீட்டு விதியை மீறக் கூடாது’ என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. அனைத்து பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த, 1978 மற்றும் 1994ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் படி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு விதியை கடைபிடிக்க வேண்டும்.
பொதுப் பிரிவு, 31; பழங்குடியினர், 1; ஆதிதிராவிடர், 18; பிற்படுத்தப்பட்டோர், 20; முஸ்லிம், 3.5; பிற்படுத்தப்பட்டோர், 26.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, பொதுப்பிரிவு பட்டியலும் தயாரிக்கப்பட வேண்டும். இதில், எந்த விதிமீறலும் இருக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment