தமிழகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, வரும், 19ல், மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தர்மபுரியில், கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட தலைவர் கவுரன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்.ரத்தினம் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சீர் குலைக்கும் வகையில், தமிழக மாணவர்களுக்கும், மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கக் கோரி, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, வரும், 19ல், தர்மபுரியில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில தலைவர் தியாகராஜன் தலைமை வகிக்க உள்ளார்.
எனவே, வரும், 19ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment