இன்ஜினியரிங் படிப்புக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற மத்திய அரசின் உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கான முதல் கட்ட, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு, ஏப்., 2லும், எழுத்துத் தேர்வு, ஆன்லைனில் ஏப்., 8, 9லும், நடந்தது. சி.பி.எஸ்.இ., நடத்திய, இந்த தேர்வின் முடிவுகள், நேற்று வெளியாகின. இதில், வழக்கம் போல, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பயிற்சி மைய மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி மற்றும், 'ரேங்க்' பெற்றுள்ளனர். கோட்டாவிலுள்ள, 'ரீசொனென்ஸ்' என்ற பயிற்சி நிறுவனத்தில் படித்த, உதய்ப்பூரைச் சேர்ந்த, கல்பிட் வீர்வால் என்ற மாணவர், 360க்கு, 360 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பொது பிரிவிலும், தலித் மாணவர்களுக்கான பிரிவிலும், இவர் முதலிடத்தில் வந்துள்ளார். இவரது தந்தை, புஷ்கர்லால் வீர்லால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றுகிறார்.இந்த தேர்வில், நாடு முழுவதும், 11 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2.20 லட்சம் பேர், அடுத்த கட்ட தேர்வு எழுத, தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' என்ற அடுத்த கட்ட தேர்வு, சென்னை ஐ.ஐ.டி., சார்பில், மே, 21ல் நடத்தப்படுகிறது. அதற்கு, இன்று முதல், மே, 2 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment