''பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையை, ஜூலைக்குள் நிறைவேற்றாவிடில் ஆகஸ்டில் போராட்டத்தை தவிர்க்க முடியாது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் அன்பரசு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் பேசினர். அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம், இடைக்கால நிவாரணம் வழங்கும் நிலை உருவாகாமல் சம்பள கமிஷன் அமைப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஜூலைக்குள் ஆய்வு நடத்தி நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்கள், அரசு செயலர்கள் ஏற்றுக் கொண்டனர். அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். பேச்சில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை, ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் ஆகஸ்டில், மீண்டும் காலவரையற்ற போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment