நாடு முழுவதும், பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த, 2005ல் வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில், தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களும், சி.பி.எஸ்.இ.,யும் ஆண்டுதோறும், பாடத்திட்டங்களில் புதிய அம்சங்களை சேர்த்து வருகின்றன.
புதிய கல்வி ஆண்டான, 2017 - 18ல், ஒவ்வொரு வகுப்புக்கும் என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டும் என, புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது. http://cbseacademic.in என்ற இணையதளத்தில், பாடத்திட்ட விபரங்களை பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment