ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., -என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஜே.இ.இ., என்ற, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. நாடு முழுவதும், 11 லட்சம் பேர் எழுதியதில், 2.21 லட்சம் பேர், இரண்டாம் கட்ட தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், ஜே.இ.இ., தேர்வின் விடைத்தாள் நகல்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் என, தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
விடைத்தாள் மற்றும் மதிப்பீட்டு தாள் தேவைப்படுவோர், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதன் முழு விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment