திருவண்ணாமலையில், போலி பணி ஆணையால், ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு உடந்தையாக இருந்த, ஒரு ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி பணி நியமன ஆணை கொடுத்து ஆசிரியராக பணிக்கு சேர்ந்தவர்கள் பற்றி விபரம் வெளியானது. இதையடுத்து, மூவர் தலைமறைவாகினர்.
இதில், இருவர் அக்கா, தங்கை. இவர்களுக்கு உதவியதாக ஆவணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல், இரண்டு நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த, மாதலம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சக்கரை என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இவரையும் சஸ்பெண்ட் செய்து, சி.இ.ஓ., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment