நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவோர் www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி துவங்கியது.
மே மாதம் 7-ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வாதத்தின் இறுதியில் ஏற்கனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள், குறிப்பாக தமிழக மாணவர்கள் நல்ல வாய்ப்பாக கருதி நாளை முதல் ஏப்ரல் 5க்குள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.
நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment