தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் 10,61,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலைநிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சற்றே சமாதானமடைந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். எனினும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார். ஊதியக்குழு அமைப்பது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment