தமிழகத்தில், முதன் முறையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில், 27 ஆயிரத்து, 889 மாணவ,- மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். நேற்று துவங்கிய தேர்வு, 31ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும், தமிழகத்திலேயே முதன் முறையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 1800--121--7030 என்ற எண்ணை, காலை, 9:00 முதல், இரவு, 9:00 மணி வரை, தொடர்பு கொண்டு, தேர்வு மற்றும் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை, மாணவர்கள் கேட்கலாம். மறுமுனையில், பயமின்றி தைரியமாக தேர்வு எழுதுவது குறித்து, ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment