உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 5 கிராம் அளவு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் என கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலை.,யில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும். அதற்கும் குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும்.
அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment