Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 3, 2017

    இனி தனியார் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தால் ரூ.150 கட்டணம்

    மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150-ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.


    இதுதொடர்பாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையுடைய சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்த அறிவிப்பில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.

    இதேபோல், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகளும் 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
    ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தமட்டில், முதல் 5 ரொக்க பரிவர்த்தனைகள் அல்லது ரூ.10 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தல் அல்லது திருப்பி எடுத்தல் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 5 அல்லது ரூ.150-ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: