சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்களைப் பெற ஆதார் அட்டையை அவசியமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, நேரடி மானியம் திட்டத்தில் ஆதார் அட்டை இல்லாமலேயே எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை பெறலாம். இது குறித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment